சொத்தில் பங்கு கேட்டு உறவினரை தாக்கியவர் கைது

சொத்தில் பங்கு கேட்டு உறவினரை தாக்கியவர் கைது
X

செங்கோட்டையில் சொத்தில் பங்கு கேட்டு பெரியப்பாவை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் முனியாண்டி என்பவரின் தாயார் பெயரிலுள்ள இடம் ஊர் பெரியவர்களின் முன்னிலையில் அவருக்கும் அவரது தம்பிக்கும் சரிபாதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிக்கப்பட்ட இடத்தை முனியாண்டியின் உடன் பிறந்த தம்பி மகனான இசக்கிமுத்து என்பவர் முனியாண்டியிடம் இடத்தில் அதிக பங்கு கேட்டு அடிக்கடி பிரச்சனை செய்து வந்தாராம்.

இந்நிலையில் முனியாண்டி சம்பவத்தன்று அவரது வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த இசக்கிமுத்து, முனியாண்டியிடம் இடத்தில் அதிக பங்கு கேட்டு அசிங்கமாக பேசி மிதித்து காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து முனியாண்டி செங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி இசக்கிமுத்து(36) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!