அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
X

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் பெறப்பட்டதாக தொடர்ந்து நகராட்சி ஆணையரிடம் புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது 2வது வார்டு கிருஷ்ணாபுரம் விஷால் நகர் பகுதியில் முன் அனுமதி, வைப்புத் தொகை உட்பட எவ்வித பணமும் செலுத்தாமல் திருட்டுத்தனமாக போடப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் இருப்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் பொறியாளர் ஸ்டாலின் ஜெபசிங் அறிவுரையின் படி இளநிலை பொறியாளர் முரளி தலைமையில் பொறியியல் பிரிவு ஊழியர்கள் முறைகேடாக பெற்ற இணைப்புகளை துண்டித்தனர்.

Tags

Next Story