உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
X

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசியதாக கூறி அதை கண்டித்து கடையநல்லுாரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது போன்று பேசுவதை உடனே உதயநிதி நிறுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதற்கான பாடத்தை புகட்டுவதாகவும் பேசினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தால் தென்காசி - மதுரை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!