கடையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக பிடித்தது

கடையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக பிடித்தது
X

திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சில் பதவிகள் உள்ளன. இதில் திமுக 11 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றியது.

திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர்

1வது வார்டு மகேஷ் மாயவன், இரண்டாவது வார்டு சங்கர், நாலாவது வார்டு ரம்யா, 5-ஆவது வார்டு தமிழரசி, ஏழாவது வார்டு ஆவுடை கோமதி, எட்டாவது வார்டு பாலக செல்வி, 10-ஆவது வார்டு செல்லம்மாள், 13வது வார்டு ஜெயக்குமார், 14வது வார்டு ஜஹாங்கீர், 15-ஆவது வார்டு புஷ்பராணி, 16வது வார்டு சுந்தரி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்

காங்கிரஸ் கட்சி சார்பில் பதினோராவது வார்டில் போட்டியிட்ட இசக்கி குமார் வெற்றி பெற்றார் 3வது வார்டு ஜனதா, 6வது வார்டு கணேசன், 9வது வார்டு தங்கம், 17 வது வார்டு இசக்கியம்மாள் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture