சங்கரன்கோயில் ஒன்றிய சேர்மன் பதவி திமுக வசமானது

சங்கரன்கோயில் ஒன்றிய சேர்மன் பதவி திமுக வசமானது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 12 இடங்களை திமுக பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றிய சேர்மன் பதவியை பெறுகிறது. சுயேச்சை வேட்பாளர்களாக மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக ஒரு இடத்திலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

1வது வார்டு சமுத்திரம், 3-வது வார்டு முத்துக்குமார், நாலாவது வார்டு சண்முகசுந்தரி, ஆறாவது வார்டு பார்வதி, ஏழாவது வார்டு தமிழ்ச்செல்வி, ஒன்பதாவது வார்டு செல்வி, 10-ஆவது வார்டு பரமகுரு, 11வது வார்டு ராமலட்சுமி, 12வது வார்டு சங்கரபாண்டியன், 13வது வார்டு முனியம்மாள், 15வது வார்டு ராமர், 17வது வார்டு வேலு தாய் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இரண்டாவது வார்டு தங்கச் செல்வி, 5-ஆவது வார்டு அமுதா, 16வது வார்டு கணேச புஷ்பா ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக வெற்றி பெற்றுள்ளனர் 8வது வார்டில் மேனகா சாந்தி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 14 வது வார்டில் பழனிச்சாமி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்