சம்பா பருவத்திற்கான பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சம்பா பருவத்திற்கான பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
X
தென்காசி மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கான பயறுவகை, மக்காச்சோளம் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் சம்பா 2021 -22 பருவத்தில் பருவ மழையை பயன்படுத்தியும் பாசன வசதிகளை பயன்படுத்தியும் நெல், உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம், சோளம், பருத்தி, நிலக்கடலை, கரும்பு உட்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு எதிர்பாராத விதமாக இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.

நடப்பு சம்பா பருவத்தில் தென்காசி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயிறு பயிர்களுக்கு காப்பீடு செய்ய காலக்கெடு நாள் 15.11.2021 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்காசோளம், பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய காலக்கெடு நாள் 30.11.2021 ஆகவும், சோளம் பயிருக்கு காப்பீடு செய்ய 15.12.2021 இறுதிநாளாகவும், நிலக்கடலை பயிருக்கு 31.12.2021 இறுதிநாளாகவும், நெல் - (கோடை நெல்)-க்கு, காலக்கெடு நாள் : 31.01.2022 எனவும், கரும்புக்கு காப்பீடு செய்ய காலக்கெடுநாள் 31.08.2022 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிசானம் பருவ நெல் பயிர் காப்பீடு செய்ய ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 15.12.2021 காலக்கெடு நாளாக உள்ளது.

இத்திட்டத்தில் காப்பீடு செய்ய காப்பீட்டு தொகை ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.466 எனவும், மக்காச்சோளத்திற்கு ரூ.282 எனவும், உளுந்து மற்றும் பாசிப்பயிறு ரு,256 எனவும் நிலக்கடலைக்கு ரூ. 323 எனவும், பருத்திக்கு ரூ.534 எனவும், கரும்பு பயிருக்கு ரூ. 2600 எனவும், சோளம் பயிருக்கு ரூ.177 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களான வாழை, வெங்காயம், மிளகாய் பயிர்களுக்கும் இத்திட்டம் தென்காசி மாவட்டத்தில் சம்பா பருவத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. அவற்றுக்கு பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய 31.01.2022 இறுதிநாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாழை பயிருக்கு பிரிமியம் தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3413 எனவும், வெங்காயத்துக்கு ரூ.1073 எனவும் மிளகாய் பயிருக்கு ரூ.1129 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சேர விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று, நில ஆவணங்களுடனும், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல் ஆகியவற்றுடனும் பொது சேவை மையங்களையோ, வங்கிகளையோ, கூட்டுறவு சங்கங்களையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு தங்கள் பகுதியின் வேளாண்மை,தோட்டக்கலை அலுவலகங்களை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?