முன்மாதிரியாக மாறிய தென்காசி மாவட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள்...

முன்மாதிரியாக மாறிய தென்காசி மாவட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள்...
X
முன்மாதிரியாக தென்காசி மாவட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள்.முன்கள பணியாளர்களாக மாறிய முதல் தலைமுறை பட்டதாரிகள்....

முன்மாதிரியாக தென்காசி மாவட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள்..தாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்தை பசுமையாக மற்றும் இளைஞர்கள்

கொரோனா பரவலின் இரண்டாம் அலை இந்தியாவை அலற வைத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், தன் ஊர்காரர் , உறவுக்காரர் என யாருக்கு தொற்று கண்டாலும், அவர்கள் உயிர் இழக்க நேரிட்டாலும் அவர்களின் இறுதி நிகழ்வுகளில் கூட பங்கெடுக்க தயங்கும் உற்றார், உறவினர்களுக்கு மத்தியில் தம் உயிரையும் துச்சமென மதித்து மனிதம் காக்க போராடுபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் போன்றோர் முன் களப்பணியாளர்கள் என்றால் அது மிகையாகாது.....

அரசாங்கம் எவ்வளவு தான் முன் ஏற்பாடுகள் செய்தாலும், முன் எச்சரிக்கையின்றி மக்கள் செயல்படும்போது அவர்களைக் காக்கும் பொறுப்பு முன்கள பணியாளர்களைச் சார்ந்தது மட்டும் தானா....?

இதோ... ! நாங்களும் இருக்கிறோம் என களமிறங்கி உள்ளார்கள், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் கிராமத்தினை சார்ந்த இந்த இளைஞர்கள்.

இயற்கை எழில் சூழ்ந்த இந்த கிராமத்தில் விவசாயம் மட்டுமே முதன்மையான தொழில் ஆகும். இங்குள்ள அனைத்து குடும்பங்களிலுமிருந்தும் உருவாகியுள்ள முதல் தலைமுறைச் சார்ந்த பேராசிரியர்கள் முதல் வேலை இல்லா பட்டதாரிகள் வரை அனைவரும் இணைந்து "பசுமை இலத்தூர்" எனும் குழுவின் வழியே இணைந்து இந்த ஊரடங்கு கால கட்டத்தில், சாலைகளின் இரு மருங்கிலும் மரம் நடுதல், ஊர் பொது இடங்களை தூய்மை செய்தல், அரசு சார் அமைப்புகளுடன் இணைந்து கொரானா விழிப்புணர்வு முகாம் நடத்தல் என இவர்களின் முன் களப்பணி சார்ந்த செயல்பாடுகள் அந்த கிராமம் மட்டும் அல்லாது சுற்றியுள்ள கிராமங்களிலும் அனைவராலும் பேசு பொருளாகி உள்ளது.

2k கிட்ஸ் அனைவரும் சமூக வலைதளங்களில் காதல் செய்து கொண்டிருக்கும் வேளையில் இந்த கிராமத்தின் சிறுவர்கள் இயற்கை பராமரிப்பு, சுற்றுசூழல் கல்வி என 90'S கிட்ஸ் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்...

இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது."ஊர் கூடி தேர் இழுத்தல்" என்பது போல செயல் பட்டு "மாற்றம் எனும் சொல் மட்டுமே மாற்ற இயலாதது" என்பதனை முன் களப்பணியாளர்களாக மாறி, செய்கையில் செய்து காட்டிக்கொண்டிருக்கும் இந்த இளைஞர்களின் பணி சிறக்க வேண்டும் என்பது கிராம மக்கள் எதிர்பார்ப்பு.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!