தென்காசி பகுதியில் சத்தமில்லாமல் சகாப்தம் படைத்து வரும் மென்பொருள் நிறுவனம்

தென்காசி பகுதியில் சத்தமில்லாமல் சகாப்தம் படைத்து வரும் மென்பொருள் நிறுவனம்
X
தென்காசி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கும் மென்பொருள் நிறுவணம்.

ஊரடங்கு காலங்களில் உணவின்றி தவிப்பவர்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள்மற்றும் தமிழக அரசும் இயன்ற உதவிகள் செய்து வருகிறது. அதனைநாம் உள்ளுர் தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொண்டோம். ஆனால் தென்காசி பகுதியில் சத்தமே இல்லாமல் தினமும் 4000 பேருக்கு உணவு வழங்கி வருகிறது ஒரு நிறுவனம் அவர்களையும் உணவு பெறுபவர்களையும் தவிர பலருக்கு தெரியாது.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே தனியார் மென்பொருள் நிறுவனம் (Zoho ) இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, தேனி, கம்பம், தென்காசி, உள்ளிட்ட 26 இடங்களில் கிளைகள் உள்ளது. இந்நிறுவனத்தின் தலைவராக ஸ்ரீதர் வேம்பு செயல்பட்டு வருகிறார். ஊரடங்கு உத்தரவால் மென்பொருள் நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்தே தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு அறிவித்த நாள் முதல் அவர்களது நிறுவனத்தை சுற்றியுள்ள கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிறுவனத்தின் சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மத்தளம்பாறை, கடையம், சம்பன்குளம், புல்லுக்கட்டு வலசை, குற்றாலம், செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் தினமும் சுமார் 4000 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மின் வாரிய ஊழியர் களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. இவர்கள் வழங்கும் உணவு சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு தரமாக வழங்கப்படுவதால் உணவுகளைப் பெற்றுக் கொள்ள மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

நிறுவனத்தின் தலைவரின் அறிவுறுத்தலின்படி நிறுவனம் அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் உணவின்றி கஷ்டப்படக் கூடாது என்ற மனப்பான்மையில் இந்த சேவைகள் நடைபெறுகிறது. இதற்காக நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை செலவு செய்யப்படுகிறது. யாரிடமும் நன்கொடை பெறாமல்,நிறுவனத்தின் சொந்த செலவிலேயே இந்தப் பணிகளை மேற்கொள்வதாகவும், இதேபோல் அனைத்து கிளைகளிலும் உணவு வழங்கி வருவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை அப்பகுதி மக்களுக்கு சோறு போடும் அவர்கள் தான் ஹீரோ..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!