நடிகர் வடிவேலு பட பாணியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகிறார்: அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி திருக்கோவிலில் நடந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு
தன் மீது கைது நடவடிக்கை எதுவும் இல்லை என தெரிந்து தான் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை கைது செய்யுங்கள் கைது செய்யுங்கள் என வடிவேல் பட பாணியில் காமெடி செய்வதாக அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் செய்தார்.
செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு செல்ல 2 மினி பேருந்துகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்
பின்னர் அவர் மேலும் பேசியதாவது: செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி திருக்கோவில் தமிழக கேரள மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற மலைக் கோவிலாகும், இக்கோயிலுக்கு பக்தர்கள் சுமார் 650 படிகள் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது . இதனால் வயதான பக்தர்கள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது அனைத்து தரப்பு பொதுமக்களும் கோயிலுக்கு சென்று வர மலை அடிவாரத்திலிருந்து மலைக்கோவில் வரை 2 மினி பஸ்களை ரூ 40 லட்சம் செலவில் கடையநல்லூரை சேர்ந்த அருணாசலம் செட்டியார் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன.
கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது யார் வேண்டுமானாலும் புகார் தரலாம் இந்த சட்டத்தை கொண்டு வந்தோம் அந்த வகையில் பெறப்பட்ட புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். இந்து அறநிலைத்துறை வெளிப்படையான தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இல்லையென்றால் 2,450 கோடி ரூபாய் அளவிலான சொத்துகளை பறிமுதல் செய்து இருக்க முடியாது. ஆகவே இது சட்டத்தின் ஆட்சி. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக பாஜக தலைவர் தன்னை கைது செய்யட்டும் என்று சவால் விடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நடிகர் வடிவேலு ஒரு படத்தில் நானும் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் என்று சொல்வாரே, அதே போன்று தான் அவரது நிலைமை உள்ளது. அவரது வயதை தாண்டி நூறாண்டுகள் கடந்த திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி தான் திமுக. இந்த ஆட்சியை பயமுறுத்தலுக்கு அஞ்சாத ஆட்சி. சட்டத்தின்படி தவறு என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்கமாட்டார். உண்மையிலேயே ஒருவர் குற்றம் செய்து சவால் விட்டால், அவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஸ்காட்லாந்து இணையான தமிழக போலீஸ் கடமையை தவறாது நிறைவேற்றும். அவர் மீது கைது நடவடிக்கை இல்லை என்பதை நன்கு தெரிந்து கொண்டுதான் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு கைது செய்யுங்கள் என்று அண்ணாமலை சொல்லிக்கொண்டிருக்கிறார்.
கோவில்களில் ஒரு கால பூஜை நடத்துவதற்கு 129.50 கோடிகளை வழங்கியவர் நமது முதல்வர் , சிறிய அங்கீகாரமிலலாத கோவில்களில் பூஜை செய்யும் 9,950 கோவில் பணியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கி அவர்களது வங்கி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியவர் நமது முதல்வர். கோவிலுக்கு நன்கொடை வழங்குபவர்கள் இந்த ஆட்சியில் போற்றப்படுவார்கள். நன்கொடையாளர்கள் முதல்வரை சந்திக்க இந்து சமய அறநிலைத்துறை ஒரு பாலமாக இருக்கும் என்றார் அமைச்சர் சேகர்பாபு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu