இளைஞரை தாக்கி காெல்ல முயன்றவர் கைது

இளைஞரை தாக்கி காெல்ல முயன்றவர் கைது
X

ஆலங்குளம் அருகே இளைஞரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதமுத்தூர் பகுதியில் வசித்து வரும் பத்திரகாளி (37) என்பவர் மதுபானத்தை அனுமதியின்றி விற்பனை செய்வதை அறிந்து ஆலங்குளம் போலீசார், பத்திரகாளியை தேடி வந்துள்ளனர். இதற்கு காரணம் ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தான் என நினைத்து பத்திரகாளி அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் பத்திரகாளியை அசிங்கமாக பேசி இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பத்திரகாளி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பத்திரகாளியின் தாயார் ஆலங்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுப்பிரமணியன் என்பவரின் மகனான சுரேஷ்(44) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேற்படி சுரேஷ் மீது ஆலங்குளம் போலீசில் குற்ற சரித்திர பதிவேடு துவங்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வரும் நபர் என்பதும், ஆலங்குளம் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story