பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் கைது

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்  கைது
X

தென்காசி மாவட்டம் கடையம் அருகே செங்காணுரில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செங்காணுரை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது மகன் கதிர் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை காதலிக்க வற்புறுத்தியும் திருமணம் செய்யவும் கட்டாயப்படுத்தி துன்புறுத்தியுள்ளார்.இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் கதிர் மீது மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகார் மீது விசாரணை செய்த கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் கதிர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையிலடைத்தார்.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு