கடன் கொடுக்காதவரை தாக்கி கொலை மிரட்டல்- இளைஞர் கைது

கடன் கொடுக்காதவரை தாக்கி கொலை மிரட்டல்- இளைஞர் கைது
X

கீழ ஆம்பூரில் பெட்டிக்கடையில் கடன் கொடுக்காததால் கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஆம்பூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (19) என்பவர் தண்ணீர் பாட்டில் கடனாக கேட்டுள்ளார். ஏற்கனவே கொடுத்த வேண்டிய கடனைக் கொடுத்து விட்டு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொள்ளுமாறு பாலசுப்பிரமணியன் கூறியதற்கு அவரை அசிங்கமாக பேசி கடைக்குள் அத்துமீறி நுழைந்து,கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாலசுப்ரமணியன் ஆழ்வார்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ., முத்துகிருஷ்ணன் விசாரணை நடத்தி கீழ ஆம்பூர் தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரம்மாட்சி என்பவரின் மகன் கார்த்திக்(19) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!