கோவில் மலை உச்சியிலிருந்து குதித்து இளம்பெண் தற்காெலை

கோவில் மலை உச்சியிலிருந்து குதித்து இளம்பெண் தற்காெலை
X

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சுமார் 1000க்கு அடி மேல் உயரம் கொண்ட தோரணமலை முருகன் கோவில் மலை உச்சியில் இருந்து பெண், தன் குழந்தையுடன் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பால்வண்ணநாதபுரத்தை சேர்ந்தவர் தேவபுத்திரன் இவருடைய மனைவி லட்சுமி தேவி (39), இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் மணிசா (7).கடந்த 1 மாதத்திற்கும் மேலாக லெட்சுமி தேவி மனநலம் பாதித்து இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு மகள் மணிசாவுடன் கோவிலுக்கு வந்தவர்கள் வீடு திரும்பாததால் அவரது கணவர் தன் உறவினர்களுடன் சேர்ந்து கோவில் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

இன்று காலை மலை உச்சியில் பெண்ணின் சால்வையை பார்த்த உறவினர்கள் மலையின் வடபுறம் உச்சியிலிருந்து சுமார் 150 அடி ஆழத்தில் அந்த பெண் இறந்து கிடப்பதை பார்த்தனர்.பின்னர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் மூலம் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!