நெல்லை எம்.பி. முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பெண்கள்

நெல்லை எம்.பி. முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பெண்கள்
X

நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் பெண்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் பெண்கள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர்

மாற்று கட்சியிலிருந்து விலகியவர்கள் காங்கிரஸில் இணைந்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் வட்டார மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி வீட்டிற்கு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் வருகை தந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கடையம் வட்டார மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி தலைமையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் மாற்று கட்சிகளில் இருந்து விலகிய பெண்கள் காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதில் கடையம் வட்டார தலைவர் முருகன், ஆழ்வை நகர தலைவர் முருகன், ஆலங்குளம் வட்டார் தலைவர் ரூபன் தேவதாஸ்,பாப்பாக்குடி வட்டார தலைவர் தினகரன், மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம், செல்வக்குமார், முப்புடாதி, முருகேஸ்வரி, கோவில் பிள்ளை,பார்வதி நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வந்திருந்த எம்பியிடம் அங்கிருந்த பெண்கள் மகளிர் உதவி தொகை கேட்டு மனு அளித்தனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடிய நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!