ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
X

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் போலீசார் சார்பாக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணியானது பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் ஆலங்குளம் காவல் நிலையத்திலிருந்து துவக்கப்பட்டு ஆலங்குளம் பஸ் ஸ்டாண்ட் வரை நடைபெற்றது.மேலும் இப்பேரணியில் ஆலங்குளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!