வி கே புதூர் அருகே சாலை விபத்து ஒருவர் படுகாயம்

வி கே புதூர் அருகே சாலை விபத்து ஒருவர் படுகாயம்
X

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் அருகே நடந்த சாலை விபத்து

வி கே புதூர் அருகே சாலை விபத்து ஒருவர் படுகாயமடைந்தார்.

சுரண்டை அடுத்த கீழ சுரண்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எபனேசர் (வயது 25). இன்று காலையில் தனக்குச் சொந்தமான பைக்கில் வீரகேரளம்புதூர் அருகே உள்ள ஒரு சர்ச்சுக்கு பிரார்த்தனைக்காக சென்றுவிட்டு மதியம் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

பைக் பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டு இருக்கும் பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை முந்துவதற்கு முயற்சி செய்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் கால் பகுதியில் பலத்த காயமடைந்தார்.தகவல் அறிந்ததும் சுரண்டை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் விரைந்து வந்து எபநேசரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

டிப்பர் லாரி ஓட்டி வந்த டிரைவர் மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிப்பாண்டி மகன் முத்துப்பாண்டி (வயது 30) சுரண்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture