ஆலங்குளத்தில் இன்று வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

ஆலங்குளத்தில் இன்று வருமுன் காப்போம்  சிறப்பு மருத்துவ முகாம்
X
ஆலங்குளத்தில் இன்று, தமிழக அரசின், வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

ஆலங்குளத்தில், தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் திட்டப்படி, 3/12/2021 இன்று வெள்ளிகிழமை சிறப்புஇலவச மருத்துவ முகாம் நடைபெறஉள்ளது. டி பி வி நாடார் சங்க திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாமில் . இரத்த பரிசோதனை ஸ்கேன் , ஈ சி ஜி, இரத்த அழுத்தம் பரிசோதனை, சுகர் டெஸ்ட் அனைத்தும் எடுக்கப்படும்.

நோய்களுக்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இவையனைத்தும் இலவசம். அத்துடன், ௧௮ வயதிற்கு மேற்பட்டோருக்கு, முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரானா தடுப்பூசியும் போடப்படும். எனவே, ஆலங்குளம் வட்டார மக்கள் அனைவரும் இம்முகாமை பயன்படுத்தி, நலம் பெற்றுச் செல்லுமாறு, சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளபடுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்