தமிழகத்தை மோடியிடம் விற்று விடுவார் இபிஎஸ் - உதயநிதி

தமிழகத்தை மோடியிடம் விற்று விடுவார் இபிஎஸ் - உதயநிதி
X

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்தால் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை பிரதமர் மோடியிடம் விற்று விடுவார் என தென்காசி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை ஆதரித்து அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை வீசியதாக கூறப்பட்ட நிலையில், தமிழகத்தில் திமுகவை அதிக இடங்களில் மக்கள் வெற்றி பெற வைத்த காரணத்தால் தமிழக மக்கள் மீது மோடி கோபத்தில் இருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு அளிக்கின்ற வாக்கு அதிமுகவின் வாக்கு இல்லை, அது பாஜகவிற்கு அளிக்கின்ற வாக்கு ஆகும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்துள்ளார். இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்தால் தமிழகத்தை மோடியிடம் எடப்பாடி பழனிசாமி விற்று விடுவார் என பேசினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா