ஆலங்குளத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் விசாரணை

ஆலங்குளத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் விசாரணை
X

ஆலங்குளத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் அசோக்குமார்.

ஆலங்குளத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் வெட்டி படுகொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, நெட்டூர் கிராமம், அசோக்குமார் என்ற வழக்கறிஞர் சொத்து தகராறு காரணமாக உறவினர்களால் தனது சொந்த வீட்டினுள் வைத்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொலை செய்த குற்றவாளி ராணுவத்தில் பணிபுரிந்தவர் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அங்கு அசாம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊர் பொதுமக்கள் குறிப்பிடுகையில், நெட்டூர் பகுதியில் புறக் காவல் நிலையம் முன்பு இருந்தது. அப்போது சில பிரச்சனைகள் வராமல் தடுக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த புறக் காவல் நிலையம் செயல்பாட்டில் இல்லை. அந்த புற க்காவல் நிலையம் மீண்டும் அமைத்து எங்கள் ஊருக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story