ஆலய நிகழ்ச்சிக்கு தடை விதித்த அறநிலையத்துறை அதிகாரி: மறியல் போராட்டம் அறிவிப்பு
போராட்ட அறிவிப்பு போஸ்டர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சிவசைலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதர் சுவாமி கோவில். இந்த கோவில் பழைமையும் புராதனமும் வாய்ந்தது. இந்தக் கோவிலில் உள்ள பரமகல்யாணி அம்மன் ஆம்பூரில் பிறந்ததாக ஐதீகம்.
அதனால் வருடத்துக்கு ஒரு முறை ஆம்பூரில் நடைபெறும் வசந்த அழைப்பு எனும் நிகழ்ச்சிக்கு சிவசைலநாதர் மற்றும் கல்யாணி அம்பாள் உற்சவர் சிலைகள் இங்கு கொண்டு வந்து வைத்து பூஜைகள் நடைபெறும்
ஆம்பூரில் உள்ள நீர்ப்பாசன கமிட்டி பொறுப்பேற்று இந்த "வசந்த அழைப்பு நிகழ்ச்சியை" ஆண்டுதோறும் நடத்தி வந்தனர். பல ஆண்டுகள் மரபாக மக்கள் மத்தியில் இந்த விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு திடீரென நடத்த தடை விதிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வசந்த அழைப்பு நிகழ்ச்சி நடத்த கோவில் நிர்வாக அலுவலர் அனுமதி தர மறுத்து விட்டதை கண்டித்து வரும் மே 6ம் தேதி ஆம்பூரில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். சுற்றுவட்டார மக்கள் பலரும் இதில் பங்கேற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu