பேரிடர் காலத்தில் சேவையாற்றும் தோரணமலை முருகன் பக்தர் பேரவை

பேரிடர் காலத்தில் சேவையாற்றும் தோரணமலை முருகன் பக்தர் பேரவை
X
தோரணமலை முருகன் பக்தர்கள் குழு சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரண முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இந்தக் கோவில் சார்பில் ஆன்மிகப் பணி மட்டுமின்றி சமுதாயப் பணிகளும் நடந்து வருகிறது. விவசாயிகள் நலம் பெற வர்ணகலச பூஜை நடைபெறும். சிறந்த சமூகப் பணியாளர்களுக்கு தோரணமலையான் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியவுடனேயே கோவிலில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது. கோவிலில் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டு உள்ளன.

தற்போது முழு ஊரடங்கு என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதி்க்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கோவில் சார்பில் சமுதாயப்பணிகள் நடந்து வருகிறது. தினசரி கோவில் சார்பில் கடையம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள முன்கள பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு பொட்டலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு உபகரணங்கள்

இந்நிலையில் இன்று கடையத்தில் உள்ள தோரணமலை முருகன் பக்தர்கள் குழு சார்பில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரங்கள் வழங்கப்பட்டன. கோவில் பரம்பரை அறங்காவல் செண்பகராமன் அறிவுரையின் பேரில் இந்த பணி நேற்று நடந்தது. அதாவது கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சானிடைசர்ஸ், முக்கவசங்கள், சோப்பு போன்றைவை வழங்கப்பட்டன. அவற்றை அரசு டாக்டர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து கடையம் போலீஸ் நிலையத்திற்கு முகக்கவசம், சானிடைசர், சோப்பு, தரையை சுத்தம் செய்ய பயன்படும் கிருமிநாசினி, கபசுரக்குடிநீர் பொடி பாக்கெட்டுக்கள் வழங்கப்பட்டன. இவைகளை கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் பெற்றுக் கொண்டார்.

இதேபோல் பஞ்சாயத்து அலுவலங்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் சானிடைசர்கள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

பொதுமக்களுக்கு...

மேலும் சாலையின் முக்கிய வீதிகளில் செல்லும் பொதுமக்களுக்கு முக்கசவம் வழங்கப்பட்டது. சிலர் சிறுவர்களை முக்கசவம் அணியாமல் அழைத்து வந்திருந்தனர். அவர்களை அழைத்து போலீசாரே அந்த சிறுவர்களுக்கு முக்கவசம் அணிவித்து விட்டனர். சிலர் கைக்குட்டையை முகக்கவசம் போல் போட்டு வந்தனர். இது தவறு என்று எடுத்துக்கூறி அவர்களுக்கும் போலீசாரோ முகக்கவசம் கொடுத்தனுப்பினர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் முக்கசவம் அணியாமல் வந்தார். அவரை போலீசார் அழைத்தனர். ஆனால் அந்த வாலிரோ தன்னை தண்டிக்கத்தான் போலீசார் கூப்பிடுகிறார்கள் என்று கருதி பயந்து ஓடினார். அவரை பிடித்து போலீசார் அறிவுரை கூறி முக்கசவம் அணிந்துவிட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கடையம் தோரணமலை முருகன் பக்தர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கடையம் பாலன் தலைமை தாங்கினார். பக்தர்கள் குழுவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் இன்பசேகரன், ஆசிரியர் அண்ணாதுரை, வெ.பழனி, மகேந்திரன், ஆத்தியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!