/* */

கடையம் அருகே குழந்தையை கடத்த முயற்சி: பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு

கடையம் அருகே குழந்தையை கடத்த முயற்சித்த பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கடையம் அருகே குழந்தையை கடத்த முயற்சி: பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு
X

காவல்துறையினால் பிடிக்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட அஜினா பேகம்

தென்காசி மாவட்டம், தெற்கு கடையம் பகுதியை சேர்ந்த சுடர்செல்வம் என்பவர் கடையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடையம், முதலியார்பட்டி பகுதியில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத பர்தா அணிந்து வந்த பெண் குழந்தையை துக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் கடையம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அடையாளம் தெரியாத பெண் அஜினா பேகம் என தன்னை கூறியுள்ளார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது போல் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவரை பூதத்தான் குடியிருப்பு பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் கொண்டு சேர்த்தனர். இந்த பெண் குழந்தையை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டத தாக கூறப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அப்பகுதியினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய சம்பவ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Updated On: 12 Dec 2023 8:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு