/* */

மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

அதிகாரிகள் மறுக்கவே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எனவே மேட்டூர் மக்கள் மனுக்களை கொடுத்துவிட்டு கூட்டத்தை புறக்கணித்தனர்

HIGHLIGHTS

மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்
X

கடையம்பெரும்பத்து ஊராட்சியில் நடந்தசிறப்பு கிராம சபை கூட்டத்தில் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

கடையம்பெரும்பத்து ஊராட்சியில் 3வது முறையாக நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தை மேட்டூர் கிராம மக்கள் புறக்கணித்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியின் பெயரை பஞ்சாயத்து நிர்வாகம் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாகக் கூறி மேட்டூர் பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 15ந்தேதி கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலி பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் கடந்த 17ந்தேதி கடையம்பெரும்பத்து ஊராட்சி ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆனால் கிராமசபைக்கூட்டத்தை 2வது முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில் நேற்று ஆசீர்வாதபுரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து 3வது முறையாக கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று பஞ்சாயத்து நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஆலங்குளம் காவல் ஆய்வாளர் மகேஷ் குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் முதலில் வருகைப் பதிவு எடுத்துவிட்டு கூட்டம் தொடங்கப்படும் என்றார். ஆனால் மேட்டூர் கிராம மக்களோ கையெழுத்தை வாங்கிவிட்டு தீர்மானத்தை நிறைவேற்றி விடுவீர்கள், முதலில் தீர்மானத்தை எழுதுங்கள் கையெழுத்திடுகிறோம் என்றனர். அதிகாரிகள் மறுக்கவே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எனவே மேட்டூர் மக்கள் மனுக்களை கொடுத்துவிட்டு கூட்டத்தை புறக்கணித்தனர்.

அவர்கள் கொடுத்துள்ள மனுவில் எங்கள் ஊரின் ரயில்வே கேட் மேற்புறம் உள்ள தெருவில் உள்ள வீடுகளுக்கு ரயில்வே கேட் மேற்புறம் என்பதற்கு பதிலாக சபரி நகர் எனவும் வெய்க்காலிப்பட்டி எனவும்பஞ்சாயத்து தலைவர் பென்ஷீலாவும் ஊராட்சி செயலர் ஆனைமணியும் இணைந்து மோசடியாக வீட்டு வரி ரசீதுகளை மாற்றி வழங்கி வருகின்றனர்.இதனால் இருஊர்களுக்கும் இடையே அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது எனவே பழைய ஆவணங்கள் படி மேட்டூர் ரயில்வே கேட் மேற்புறம் என ரசீது வழங்கவும் மோசடியாக ரசீது வழங்கிய பஞ்சாயத்து தலைவர் மீதும் ஊராட்சி செயலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

Updated On: 21 March 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!