பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நடைபெற்ற கொடியேற்றம்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று 4-ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து 9 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, இரவு 6.30 மணிக்கு சாயரட்சை, மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, 7.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது.
9-ம் தேதி செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் 12.30 மணி வரை கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 3 மணிக்கு யாகசாலை பூஜை ஹோமம், தொடர்ந்து 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கும்ப அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
10- ம் தேதி சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், மாலை 6 மணிக்கு அம்மன் காட்சி அருளுதல், மாலை மாற்றும் வைபவம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 8 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu