பெண் பயணியை, ஓட்டுனர் அடிக்க செல்லும் காட்சி. சமூக வலைதளங்களில் வைரல்

பெண் பயணியை, ஓட்டுனர் அடிக்க செல்லும் காட்சி. சமூக வலைதளங்களில் வைரல்
X

பெண் பயணியை அடிக்க செல்லும் டிரைவர்.

தென்காசியில் அரசுப் பஸ்சில் பயணம் செய்யும் பெண் பயணியை ஓட்டுனர் அடிக்க செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணியை ஓட்டுனர் அடிக்க செல்லும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தென்காசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் பேருந்தில் பயணம் செய்யும் பெண் ஒருவர் சக பயணி ஒருவரிடம் இந்த ஓட்டுநர் தன் மகளை பாதிவழியில் இறக்கி விட்டு நடந்து செல்லுமாறு கூறியதாகவும் அதேபோல் மற்றொரு பெண் பிள்ளையையும் இது போல் நடந்து செல்லுமாறு கூறி நடுவழியில் இறக்கி விட்டதாகவும் தெரிவிக்கிறார் .

இதனை அந்த பெண் வீடியோவாக தனது செல் போணில் பதிவு செய்கிறார் அப்போது அங்கு வந்த ஓட்டுனர் அந்த பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளில் பேசியதோடு அவரை செருப்பை கழற்றி அடித்து விடுவேன் .

என்று கூறிக் கொண்டு அவரை அடிக்க முற்படுகிறார் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது பெண் பயணி ஒருவரை ஓட்டுநர் ஒருவர் அடிக்க முற்படும் காட்சி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!