மயிலப்புரத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுமங்கலி பூஜை

மயிலப்பபுரத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே மயிலப்பபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டிற்க்கான வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
நாள்தோறும் சுவாமிக்கு உச்சி கால பூஜை, குழந்தைகளுக்கான ஆன்மீக நடன நிகழ்ச்சி, வேல் புஷ்பாஞ்சலி, திருக்கல்யாண வைபோகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வருகிற 30-ஆம் தேதி 1251 பிரம்மாண்டமான திருவிளக்கு பூஜையும், 2-ஆம் தேதி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம், பாலபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் போன்ற பூஜைகள் நடைபெற உள்ளது.
முன்னதாக இன்று சுமங்கலி பூஜை நடைபெற்றது. தமிழகத்தில் வேறு எங்கும் நடைபெறாத வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடப்பது போன்று இந்த சுமங்கலி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் கணவன் மனைவிக்கு அலங்காரம் செய்வது, மனைவிகள் கணவனுக்கு பாத பூஜைகள் செய்வது, கணவன் மனைவிக்கு மாங்கல்ய தானம் செய்வது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வயது முதிர்ந்த தம்பதியினரும், இளம் தம்பதியினர்களும் கலந்து கொண்டு தங்களது பரஸ்பர அன்பினை வெளிப்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu