அரசு பேருந்து வராததால் மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்
பேருந்து இயக்கப்படாததால் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தடம் எண் 27 டி நகரப் பேருந்து அம்பாசமுத்திரத்தில் இருந்து ஆலங்குளத்திற்கும் ஆலங்குளத்தில் இருந்து சுரண்டைக்கும் இயக்கப்பட்டு வருகிறது
இப் பேரூந்தில் ஒரே நேரத்தில் 200க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயணம் செய்து வருவதாகவும் ஆகவே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் இப்பகுதி மாணவர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்
இந்நிலையில் ஆலங்குளத்தில் இருந்து ஒன்பது மணிக்கு இயக்க வேண்டிய இப் பேருந்து இன்று எதிர்பாராத விதமாக ஓட்டுநர் விடுமுறையை எடுத்ததை முன்னிட்டு மிகவும் தாமதமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது
இதனால் கல்லூரிக்கு கால தாமதமாக செல்ல வேண்டி இருக்கும் என கருதிய மாணவ மாணவியர் திடீரென பேருந்து நிலையத்திற்குள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்
உடனடியாக போக்குவரத்து கழக அதிகாரிகள் திருநெல்வேலியில் இருந்து சுரண்டை வந்த அரசு புறநகர பேருந்தை கல்லூரி வரை செல்லுமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாணவர்கள் தரப்பில் கேட்ட போது தங்களுக்கு ஆலங்குளத்தில் சுரண்டை கல்லூரிக்கு செல்வதற்கு கூடுதலாக ஒரு பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu