விவசாய பயிர் நடவு முறைகள் குறித்து மாணவிகள் விளக்கம்

விவசாய பயிர் நடவு முறைகள் குறித்து மாணவிகள் விளக்கம்
X

தென்காசி மாவட்டம் கடையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு தேவையான பயிர் நடவு முறைகள் குறித்து செயல்முறை பயிற்சி விளக்கம் அளித்தனர்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தின்படி கடையம் சுற்றுவட்டார பகுதிகளான வெய்கால்பட்டி மந்தியூர், உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று செயல் விளக்கமாக பஞ்சகவ்யம் தயாரிப்பது மற்றும் அறிவியல் முறைகளில் விவசாயம் செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஆடு வளர்ப்பு, மீன்வளர்ப்பு செய்வது குறித்தும் மாடி தோட்டம் மற்றும் பக்கவாட்டு சுவர்களில் தோட்டம் அமைத்து காய்கறி வளர்ப்பது குறித்தும் மாதிரி வடிவங்களை தயார் செய்து விவசாயிகளுக்கு விளக்கி காண்பித்தனர். விவசாயிகள் திரளானோர் வந்து ஆர்வமுடன் கண்காட்சியை பார்த்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் எழிலரசி, சுபத்ரா, கார்த்திகா ,சந்தியா, அஸ்மினா, கார்த்தியாயினி ஷர்மிளா ஐஸ்வர்யா நித்தியமாலதி, கிறிஸ்டினா ஆகியோர் கலந்து கொண்டு செயல் விளக்கத்தை செய்து காட்டினார்கள்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா