வழி தவறி வந்த, பிறந்து 60 நாளே ஆன மான், மீட்ட தன்னார்வலர்கள்

வழி தவறி வந்த, பிறந்து 60 நாளே ஆன மான்,  மீட்ட தன்னார்வலர்கள்
X

வழி தவறி ஊருக்குள் வந்த மான் குட்டியை மீட்ட தன்னார்வலர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆலங்குளத்தில் வழி தவறி வந்த, பிறந்து 60 நாளே ஆன மான்குட்டி தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊருக்கு மேல்புறம் நெல்லை தென்காசி சாலை ஓரம் வயல் பகுதியில் மான் குட்டி ஒன்று நடக்க முடியாமல் சோர்வான நிலையில் இருந்தது. இதனை பார்த்த விவசாயிகள் ஆலங்குளம் பசுமை இயக்கம் தன்னார்வலர்களுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் பசுமை இயக்க தலைவர் சாமுவேல் பிரபு மற்றும் தன்னார்வலர்கள் பாலாஜி, முத்து செல்வம் ஆகியோர் பிறந்து 60 நாளே ஆன மான் குட்டியை பத்திரமாக மீட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

மீட்கப்பட்ட மானை அருகில் இருந்த தீயனைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று தண்ணீர் கொடுத்தனர். இதனால் சோர்வு நீங்கி சகஜ நிலைக்கு வந்தது. அதனை தொடர்ந்து மான் குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஆலங்குளம் வனப்பகுதியில் விடப்பட்டது.

மீட்கப்பட்ட மான்குட்டி கடந்த 2 நாளாக வழி தவறி அந்த பகுதியில் தனியாக தத்தி தத்தி சென்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!