கடையநல்லூரில் மலடு மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம்

கடையநல்லூரில் மலடு மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம்
X

கடையநல்லூரில் மலடு மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கடையநல்லூரில் மலடு மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கடையம் ஊராட்சி ஒன்றியம் 11வது வார்டு பகுதியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மலடு மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் எஸ் டி சி தொடக்கப்பள்ளி அருகில் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் தலைமையில் நடைபெற்றது.

கடையம் கால்நடைத்துறை மருத்துவர் சகானா முன்னிலை வகித்தார். கடையம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மாடுகளுக்கு மருந்துகளைக் கொடுத்து துவக்கி வைத்தார்.

மாடுகளை வளர்க்கும் பயனாளிகளுக்கு மருத்துவர் சஹானா அவர்கள் தகுந்த ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அர்ஜுனன், ஜெயசிங், ராமராஜ், கருப்பசாமி, மாரியப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர். கால்நடை மருத்துவத் துறை உதவியாளர் லதா நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!