/* */

தமிழ் புத்தாண்டில் விவசாயம் செழிக்க விவசாய உபகரணங்களுக்கு சிறப்பு பூஜை

தோரண மலையில் சுபகிருது புத்தாண்டை முன்னிட்டு விவசாயம் செழிக்க விவசாய உபகரணங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

HIGHLIGHTS

தமிழ் புத்தாண்டில் விவசாயம் செழிக்க விவசாய உபகரணங்களுக்கு சிறப்பு பூஜை
X

சுபகிருது புத்தாண்டை முன்னிட்டு விவசாயம் செழிக்க விவசாய உபகரணங்களுக்கு சிறப்பு பூஜை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரண மலை பழமையும் பாரம்பரியமும் வாய்ந்தது. அகத்தியர் தேரையர் முதலிய சித்தர்களால் பூஜிக்கப்பட்ட பெருமையும் வாய்ந்ததாகும். மூலிகை வளங்கள் சூழ்ந்த இந்த மலையில் உள்ள முருகனை வழிபட்டால் பல்வேறு நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நெடுங்கால நம்பிக்கையாகும்.

இந்த மலையில் ஒருகாலத்தில் அகஸ்தியரால் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு பல்வேறு சித்த மருத்துவ பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பழமை வாய்ந்த தோரண மலையில் சுபகிருது தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சுபகிருது தமிழ் புத்தாண்டுக்கான பூஜைகள் துவங்கியது.

மேலும் தோரண மலையில் மேலுள்ள மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்பு மலை உள்ள சுனையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு தோரண மலை அடிவாரத்தில் வைத்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

தென்காசி சிவ பூத கண நாதர் வாத்தியக் குழுவினர் இன்னிசையுடன் பூஜைகள் நடைபெற்றது.

உலகின் உணவிற்கு ஆதார தொழிலான விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் கருவிகள் ஏர்கலப்பை நீர் இறைக்கும் கூனை மற்றும் மரம் அடிக்கும் கருவி மற்றும் மாட்டு வண்டி உள்ளிட்ட வேளாண் கருவிகளை வைத்து பூஜைகள் நடைபெற்றது.சிறந்த விவசாயிகள் மற்றும் சமூக சேவைகளுக்கான தோரண மலையான் விருதும் வழங்கப்பட்டது .

சுமார் 50க்கும் மேற்பட்ட புது திருமண தம்பதிகள் நாடு செழிக்கவும் விவசாயம் மேம்படவும் பொருளாதாரம் செழிக்கவும் தேசத்தில் அமைதி நிலவவும் வேண்டி 50 பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானமும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. சுபகிருது புத்தாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Updated On: 14 April 2022 4:08 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  5. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  6. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  7. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  8. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  9. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  10. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு