கடையம் ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்: எஸ்பி நேரில் ஆய்வு

கடையம் ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்:  எஸ்பி நேரில் ஆய்வு
X

கடையம் பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட எஸ்பி கிருஷ்ணராஜ்.

உள்ளாட்சித் தேர்தலில், கடையம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள இருபத்தி மூன்று ஊராட்சிகளில், இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில் புலவனூர், வெய்க்காலிப்பட்டி, கல்யாணிபுரம், மந்தியூர், ரவணசமுத்திரம், மேலக்குத்தபஞ்சான், கீழ குத்தபஞ்சான், காளத்திமடம், சொக்கநாதன் பட்டி, பொட்டல்புதூர் ,சம்பன்குளம், கோவிந்தப்பேரி ஆம்பூர் ஆகிய 13 வாக்குச்சாவடிகளில் தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ் இன்று ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம், அவர் கேட்டறிந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!