சட்டவிரோதமாக புகையிலை கடத்திய 3 பேர் கைது

சட்டவிரோதமாக புகையிலை கடத்திய 3 பேர் கைது
X

பொட்டல்புதூரில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்புதூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை ஏற்றி வந்த பொட்டல்புதூரை சேர்ந்த செய்யது மசூது என்பவரின் மகன் மீரான் மைதீன் (32), அப்துல் வஹாஜ் என்பவரின் மகன் சாகுல் ஹமீது (42) மற்றும் செய்யது மசூது என்பவரின் மகன் அப்துல் லத்தீப் (39) ஆகிய,3 நபர்கள் மீதும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 43,680 மதிப்புள்ள 87.36 கிலோ கிராம் கொண்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!