கடையம் அருகே சிவசைலம் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
சிவசைலம் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள சிவசைலம் பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதர் சாமி திருக்கோவில் பழமையும் புராண வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும்.
அத்திரி மகரிஷி கோரக்கர் போன்ற சித்தர்கள் முனிவர்களாலும் வழிபடப்பட்ட ஆலயமாகும். இங்கு உள்ள நந்தி சிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கோயிலாகும். மேலும் இது மேற்கே பார்த்த சிவாலயமாகும் .இங்கு பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த கோவிலுக்கான கும்பாபிஷேகம் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது அதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வருகிற 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்குகிறது. 20 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் சாந்தி மற்றும் முதல் கால யாக பூஜைகள் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இரண்டாம் கால யாகபூஜை மூன்றாம் கால யாக பூஜை நடைபெறுகிறது.
மேலும் 22 ஆம் தேதி புதன்கிழமை அன்று நான்காம் கால யாக பூஜைகள் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. 23ம் தேதி வியாழனன்று ஆறாம் கலையாக பூஜைகளும் விமான மகா கும்பாபிஷேகம், மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடாக இங்கு உள்ள வாகனங்கள் மற்றும் கொடிமரம் பல்வேறு முன் ஆயத்தப் பணிகளை செய்து வருகின்றனர். யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி சர்வசாதகம் சிவஸ்ரீ பிச்சை குருக்கள் மற்றும் கோயில் ஸ்தானிகர் நாறும்பூநாதன் பட்டர் ஆகியோர் நடத்தி வைக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu