மகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது
கைது செய்யப்பட்ட சரவணன்.
Punishment Under POCSO Act -ஆலங்குளம் பஸ் நிலையம் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் திருச்சியைச் சேர்ந்த சரவணன்(42) கூலித்தொழிலாளி. இவரது மனைவி 2 தினங்களுக்கு முன்பு ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் தங்கள் 13 வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் அளித்தார்.
தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் சரவணன் தனது 13 வயது மகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியிடமும் விசாரணை நடத்தியதில் தாய் இல்லாத நேரத்தில் கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாரிடம் சிறுமி தெரிவித்தார். இதனையெடுத்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸார் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu