ஆலங்குளத்தில் ரூ.50க்கு புடவை: ஜவுளி கடையில் குவிந்த கூட்டத்தால் பரபரப்பு
ஆலங்குளத்தில் கார்திகா ஸ்டோர் என்ற ஜவுளி கடை திறப்பு விழாவில் 50 ரூபாய்க்கு சில்க் சாரிஸ் விளம்பரத்தால் குவிந்த மக்கள் கூட்டம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஜவுளி கடை திறப்பு விழாவில் 50 ரூபாய்க்கு சில்க் சாரிஸ் விளம்பரத்தால் குவிந்த மக்கள் கூட்டம். கொரனோ விதிமுறை மீறியதாக சுகாதாரத்துறை நடவடிக்கை .
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கார்திகா ஸ்டோர் என்ற ஜவுளி கடை திறக்கப்பட்டது. கடை திறப்பு விழாவிற்கு அச்சிடப்பட்ட விளம்பர நோட்டிஸில் முதலில் வரும் 3000 பேருக்கு 50 ரூபாய்க்கு இக்டா சில்க் சாரிஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் கூடியது.
மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதாலும் தீபாவளி நெருங்குவதாலும் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் தீயாய் பரவியது. இதனால் சமூக இடைவெளி மற்றும் கொரனோ விதிமுறை மீறப்பட்டது. தற்போது கொரனோ தொற்று குறைந்த நிலையில் இந்த கடை திறப்பு கூட்டத்தால் கொரனோ பரவும் அச்சம் ஏற்றப்ட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகமான கூட்டத்தால் கூட்டத்தை கட்டுபடுத்த போலீஸ் காவல் போடப்பட்டது. கொரனோ விதிகளை மீறியதற்காக ஆலங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் பொது சுகாதார சட்டத்தை மீறியதற்காக கார்திகா ஸ்டோர் நிறுவனத்திற்கு அபராதம் விதித்தார். 50 ரூபாய் சேலை என்ற அறிவிப்பால் கிராம மக்களிடையே பரப்பரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu