தூய்மை பணியாளர்கள் சம்பள குளறுபடி: சமூக ஆர்வலர்கள் புகார்

தூய்மை பணியாளர்கள் சம்பள குளறுபடி: சமூக ஆர்வலர்கள் புகார்
X

நல்லூர் ஊராட்சி அலுவலகம் பைல் படம்.

நல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் சம்பள குளறுபடி குறித்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட நல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நல்லூர் பஞ்சாயத்தில் 11 குக்கிராமங்கள் உள்ளடக்கியதாகும் நல்லூர், சிவகாமிபுரம், காசியாபுரம் , ஆலடிப்பட்டி வைத்திலிங்கபுரம், அரவன் குடியிருப்பு, பெரியார் நகர், எழில் நகர், ராஜீவ் காந்தி நகர், தங்க அம்மன் நகர் ஆகும்.

இந்த பஞ்சாயத்திற்கு அந்தோணி பஞ்சாயத்து கிளர்க் ஆக நீண்ட காலமாக தொடர்ந்து பணி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஒரே பஞ்சாயத்தில் குறிப்பாக நல்லூர் பஞ்சாயத்தில் தொடர்ந்து வேலை செய்வதால் தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் குறிப்பாக 100 நாள் வேலை குளறுபடி, திடக்கழிவு தூய்மை பணி, வறுமை ஒழிப்பு திட்டம் பல்வேறு மத்திய மாநில ஊராட்சி திட்டங்களில் குளறுபடி இருப்பதாக அந்தப் பகுதியில் வாழும் கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் புலம்பி வருகின்றனர்.

நல்லூர் பஞ்சாயத்தில் இரண்டு குறிப்பிட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேலையே செய்யாமல் வருகை பதிவேடு பதிவு செய்தல், சம்பளம் ஏற்றி சம்பளத்தை அவர்களிடம் இருந்து திரும்பப் பெறுதல் போன்ற முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

2022 ஆகஸ்ட் மாதம் முதல் 2022 டிசம்பர் மாதம் முதல் 5 மாத சம்பளம் போலியாக வேலை செய்யாத நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் மூலம் இரண்டு தூய்மை பணியாளர்களுக்கு 240 ரூபாய் வீதம் வேலை செய்யாத பணியாளர்களுக்கு போலியாக அரசு பணம் திருடப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பஞ்சாயத்து கிளர்க் அந்தோணி அவர்கள் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளராகவும், அந்த யூனியன் ஆலங்குளம் வட்டார வளர்ச்சி திட்ட அதிகாரி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவராக இருப்பதாலும் புகார்கள் முதலமைச்சருக்கும் பலமுறை உயர் அதிகாரிகளுக்கும், தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் பலமுறை புகார் மனுக்கள் அனுப்பியும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் நல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடக்கும் குளறுபடிகளை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் தென்காசி மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil