கடையம் அருகே சாமி சிலை சேதம்; போதையில் அட்டகாசம் செய்தவர் கைது

கடையம் அருகே சாமி சிலை சேதம்; போதையில் அட்டகாசம் செய்தவர் கைது
X

சேதப்படுத்தப்பட்ட சாமி சிலை.

கடையம் அருகே போதையில் சாமி சிலையை உடைத்து சேதப்படுத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே பிரசித்திபெற்ற தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. கடையம் தென்காசி சாலையில் மாதாபுரம் செக்போஸ்ட் பகுதியில் இந்தக் கோவிலின் நுழைவு வளைவு அமைந்துள்ளது. இதனருகே ஒரு உண்டியலும், சிமெண்டினாலான ஓரு முருகன் உருவச் சிலையும் உள்ளது.

இந்நிலையில், இந்த முருகன் சிலையை நேற்று இரவு மர்ம நபரால் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தகவலறிந்த கடையம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் சிவக்குமார் என்பவர் மது போதையில் சாலையிலிருந்த தடுப்புகளைச் சாய்த்தும், முருகன் உருவச் சிலையை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சிவக்குமார் மீது கடையம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி