ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட உறுப்பினா், 23 யுனியன் கவுன்சிலர், 32 கிராம ஊராட்சி மன்றத் தலைவா், 288 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 345 இடங்களுக்கான தோ்தல் நடைபெறுகிறது. அதன்படி, செப்டம்பா் 15 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.
தேர்தல் 6 மற்றும் 9 ம் தேதியில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத் தோ்தல் வாக்கு எண்ணும் மையமான நல்லூர் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கோபால சுந்தரராஜ் நேரில் சென்று, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.
வாக்குப் பெட்டிகளை பாதுகாக்கும் அறைகள், அங்கிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கான வழி, வேட்பாளா்கள், முகவா்கள், தோ்தல் அலுவலா்கள் வாக்கு எண்ணும் அறைக்கு வந்து செல்வதற்கான வழி, அங்கு மேற்கொள்ளும் பாதுகாப்பு ஆகியவை குறித்து, உதவி பொறியாளர் பூச்செண்டுவிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது ஆலங்குளம் ஒன்றிய பொறியாளர் முருகையா, வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu