ஆலங்குளத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருந்த ரூ.44 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குளத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருந்த ரூ.44 ஆயிரம் பறிமுதல்
X

பைல் படம்.

ஆலங்குளத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட இருந்த ரூ.44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சி 4-வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக நேற்று ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் நகர செயலாளர் திருமலை செல்வம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமலை செல்வத்திடம் இருந்த ரூ.44 ஆயிரத்தை பறிமுதல் செய்து, அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!