பனை தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: நாடார்கள் பேரமைப்பு தீர்மானம்

தென்காசி, ஐந்தான்கட்டளையில் உள்ள அலுவலகத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பனையில் இருந்து தவறி விழும் தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சௌந்தர பாண்டியன் நாடார் ஆலோசனையின் பெயரில் தென்காசி மாவட்டம் ஐந்தான்கட்டளையில் உள்ள அலுவலகத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணை தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் கடையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் நவம்பர் 1 ம் தேதியை தமிழக எல்லை போராட்ட நினைவு நாளாகவும், எல்லை போராட்ட தியாகிகளுக்கு பொற்கிழி வழங்கி கவரவிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் நவம்பர் 1 ம் தேதி அன்று எல்லை போராட்டத்திற்காகவும், தமிழுக்காகவும் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த சங்கரலிங்கனார் பெயரிலும், குமரி தந்தை எல்லை போராட்ட மாவீரன் மார்சல் நேசமணி நாடார் பெயரிலும் தமிழ் தேசத்தந்தை மா.போ.சிவஞானம் பெயரிலும், செங்கோட்டை எல்லை போராட்ட வீரர் கஞ்சன் நாடார் பெயரிலும் தமிழுக்காக சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு தமிழ்நாட்டுக்காக வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு இவரவர்கள் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் 1000 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் இனமான பனை மரம் வெட்டுவதற்கு தடை செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கொண்டதோடு, பனை ஏறும் தொழிளார்களுக்கு முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அடையாள அட்டையும், பனை வாரியத்தில் பதிவு செய்து வாரிய அட்டை வைத்துள்ள பனை தொழிலாளர்கள் பனையில் இருந்து தவறி விழுந்து இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தென்காசி முதல் திருநெல்வேலி வரையுள்ள நான்குவழி சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சுதன் தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன் முத்தரசு, நாகராஜன், சுப்ரமணியன், எம்.பி.பெரியசாமி, தங்கசாமி நாடார், அருமைராஜி, முருகன், பவுன், முத்துகணேசன், அழகேசன், கதிர், ராஜா, ஜீவா, யுவராஜா மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu