பத்தாண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடையம் பொதுமக்கள்.
நீர் நிலைகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத ராமநதி அணை சாலையை சீரமைக்க கோரி கடையத்தில் சர்வ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11-வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது ராமநதி நீர்த்தேக்கம். இந்த அணையின் கீழ் கடையம் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் கடையம் முதல் ராமநதி அணை வரை செல்லும் சுமார் 7 கி.மீட்டர் தொலைவு உள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக சீர் செய்யப்படாமல் உள்ளது.
இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரியும், இராமநதி அணையிலிருந்து உருவாகும் நதிகளில் உள்ள கழிவுகளை அகற்ற கோரியும், கடையம் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் பல வருடங்களாக பழுதடைந்து மூடியே கிடக்கும் நிலை உள்ளது. எனவே பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 வது வார்டு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மாரிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. முல்லை நில தமிழர் விடுதலைக் கட்சி கண்ணன், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஈசாக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காந்தியவாதி ராம்மோகன், பகுஜன் சமாஜ் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu