மழையால் குளம் போல் மாறிய ரோடு: வாகன ஓட்டிகள் பெரும்பாடு

மழையால் குளம் போல் மாறிய ரோடு: வாகன ஓட்டிகள்  பெரும்பாடு
X
மழை நீர் தேங்கி, குளம் போல் காணப்படும் தென்காசி - நெல்லை சாலை. 
தென்காசி - திருநெல்வேலி சாலையில் மழை நீர் தேங்கி, குளம் போல் இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தென்காசி, திருநெல்வேலி நான்கு வழி சாலையில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், பெரும்பாலான இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சாலைகள் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலை பணிக்காக தோண்டப்பட்ட இடங்களில் மழை நீர் தேங்கி, குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் திருநெல்வேலி - தென்காசி செல்லும் வாகன ஓட்டிகள் , பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள தண்ணீரை அகற்றி, உடனடியாக சாலைப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!