விஸ்வரூபம் எடுக்கும் கடையம் யூனியன் சேர்மன் ராஜினாமா விவகாரம்

விஸ்வரூபம் எடுக்கும் கடையம் யூனியன் சேர்மன் ராஜினாமா விவகாரம்
X

 விடுதலை மீட்பு களம் தலைவர் கரிகால மில்லன்

ராஜினாமாவை ஏற்க வலியுறுத்தி ஒரு அமைப்பும், ஏற்கக்கூடாது என மற்றொரு அமைப்பும் கூறுவதால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் குழுத் தலைவர் தேர்தலில் திமுக.வினர் இடையே நடந்த போட்டியில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் ஜெயக்குமார் என்பவரை தோற்கடித்து செல்லம்மாள் என்பவர் வெற்றி பெற்று தலைவராக பதவி ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து குடும்ப சூழ்நிலையின் காரணமாக செல்லம்மாள், 7 நாட்களில் தனது ஒன்றியப் பெருந்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

திமுகவால் பழி வாங்கப்படும் தலித் பெண்ணான யூனியன் சேர்மன் செல்லம்மாளின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 3-ம் தேதி கடையம் ஒன்றிய அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே 3-ம் தேதி செல்லம்மாளின் ராஜினாமாவை ஏற்று மறு தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் சமுதாய கூட்டமைப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

இது குறித்து தமிழர் மீட்பு களம் அமைப்பின் தலைவர் கரிகாலமில்லன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடையம் ஒன்றிய சேர்மனாக ஜெயக்குமார் வர வேண்டும் என்றுதான் திமுக அறிவித்து இருந்தது. ஆனால் பினாமியான செல்லம்மாள் வெற்றி பெற்றதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

ஆனால் புதிய தமிழகம் கட்சி தலைவர், தேவேந்திரகுல வேளாள மக்கள் இடையே மோதலை ஏற்படுத்தி விளம்பரம் தேடுபவர். புதிய தமிழகம் கட்சியினர் 3-ம் தேதி செல்லம்மாளின் ராஜினாமாவை ஏற்றக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தும், அதே நாளில் அதே நேரத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் செல்லம்மாளின் ராஜினாமாவை ஏற்று மறு தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என்று கூறினார்.

Tags

Next Story