கடையம் ராமநதி அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு

கடையம் ராமநதி அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு
X

கார் சாகுபடிக்காக ராமநதி அணையில் இருந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தண்ணீர் திறந்தார்.

தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணையிலிருந்து கார் சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தண்ணீர் திறந்து வைத்தார்

கடையம் ராமநதி அணையில் இருந்து கார் சாகுபடிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தண்ணீர் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள உச்ச நீர்மட்டம் 84 அடி கொண்ட ராமநதி அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு இன்று முதல் வருகிற அக்டோபர் 31 -ந் தேதி வரை தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று ராமநதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். இதில் பொதுப்பணி துறையினர் விவசாயிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கூறுகையில் இன்று முதல் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வரை 128 நாட்களுக்கு 60 கன அடிக்கு மிகாமல் நீர் திறப்பு மற்றும் வரத்தை பொறுத்து தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும் எனவும் இதன் மூலம் வடகால் தெங்கால் மற்றும் பாப்பாங்கால் ஆகியவற்றின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன என்றார்.

Tags

Next Story
scope of ai in future