ரயில்வே முன்பதிவு நேரம் நீட்டிப்பு: பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி

ரயில்வே முன்பதிவு நேரம் நீட்டிப்பு: பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி
X
ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டதால் பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டதால் பாவூர்சத்திரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாவூர்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் முன்பதிவு நேரத்தில் முன்பதிவு மையம் முறையாக செயல்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மதுரை கோட்ட ரயில்வே துறை அதிகாரிகளுக்கு மதுரை கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா புகார் அனுப்பினார். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பாவூர்சத்திரம் ரயில்வே முன்பதிவு ஸ்டேஷன் மையம் இயங்கும் என்றும் அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையால் பாவூர்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வருமானம் அதிகரிக்கும், அவ்வாறு அதிகரிக்கும் போது சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு ரயில் வசதி கிடைப்பது எளிதாக இருக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!