தொடர்ந்து எரிக்கப்படும் மருத்துவ எலக்ட்ரானிக் கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு

எரிக்கப்பட்ட எலக்ட்ரானிக் கழிவுகள்.
தொடர்ந்து எரிக்கப்படும் மருத்துவ மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள் சுற்றுப்புற பகுதி மக்கள் விவசாய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் பல ஒதுக்குப் புறமான இடங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகே பல கும்பல்கள் கழிவுகளை பிற மாநில பகுதிகளில் இருந்தும் பல இடங்களில் இருந்தும் கொண்டு வந்து அவற்றை எரித்து அவற்றில் உள்ள இரும்பு, செம்பு என தனிமங்களை பிரித்தெடுத்து விற்பதை வாடிக்கையாக்கி உள்ளனர்.
இதன்படி, ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கரும்பனூர் பகுதியில், ஊருக்கு வெளியே விவசாய நிலங்களுக்கு அருகே ஓர் இடத்தில் சிலர் கழிவுகளை கொட்டி, அவற்றை தீ வைத்து எரித்து வந்துள்ளனர். இதில் மருத்துவ மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள் அடக்கம் இந்த கழிவுகள் எரிக்க்கப்படுவதால் வெளியேறும் புகையால் பலர் மூச்சுத்திணறலுக்கு ஆளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் சுற்று சூழல் பாதிப்படையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி மக்கள் புகாரால் காவல்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் அபராதம் விதித்தனர். அதன் பின்னரும் தொடர்ந்ததால், இந்த பகுதி மக்கள் மீண்டும் புகார் அளித்ததனர்.
இதையடுத்து இன்று இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்டத்தில் கழிவுகள் ஏற்றி வருவதை தடுத்து இது போன்று எரிப்பவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் இதில் தீவிர கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu