பள்ளி மாணவர்கள், படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்; கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

பேருந்தில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மானவர்கள்.
தென்காசியில் பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்து பயணம் மேற்கொள்ளும் நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து கடையம் வழியாக சம்மன் குளம் வரை செல்லும் 30A என்ற தடம் என் கொண்ட பேருந்து ரவண சமுத்திரம், பிள்ளை குளம், மந்தியூர், ராஜாங்கபுரம் மற்றும் கோவிந்த பேரி ஆகிய ஊர்கள் வழியாக செல்லும்.
இந்நிலையில் கடையம் பகுதியில் உள்ள சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மற்றும் சத்திரம் பாரதி பெண்கள் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த சுமார் 200 மாணவ மாணவிகள் இந்த பேருந்தில் பயணித்து வருகின்றனர். ஆனால், இந்த பேருந்து தென்காசியில் இருந்து மிக அதிக கூட்டத்துடன் கடையம் வரும் சூழலில் கடையத்தில் இருந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் இட நெருக்கடி காரணமாக ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனர்.
அதேசமயம் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் இதே நிலை நீடித்து வருகிறது. எனவே பள்ளி மாணவர்களில் நலன் கருதி, சம்பன்குளத்தில் இருந்து கடையம் பகுதிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘போதிய பேருந்துகள் இல்லை, ஆட்கள் பற்றாகுறை’, என்ற காரணங்களை பேருந்து பணிமனை நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். எனவே அரசு பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் வாயிலாக பள்ளி செல்லும் அனைத்து மாணவ மாணவிகளும் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu