கனிமவள கொள்ளையைக் கண்டித்து கடையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கனிமவள கொள்ளையைக் கண்டித்து கடையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

கடையத்தில் தென் பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கனிமவள கொள்ளையைக் கண்டித்து கடையத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மணல் மற்றும் கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகப்படியாக கொண்டு செல்லப்படுகிறது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று தென்காசி மாவட்டம் கடையத்தில் தென் பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கரும்புலி கண்ணன் தலைமை தாங்கினார். மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழகத்தில் கனிம வளங்களை கேரளாவிற்கு எடுத்துச் செல்வதனால், இங்குள்ள இயற்கை வளங்கள் அழிய தொடங்கியுள்ளன. மேலும் கனரக வாகனங்களில் கனிம வளங்களை கொண்டு செல்வதால் சாலை பழுது அடைகிறது குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து சேதமாகின்றன. இது தொடர்ந்து நடைபெற்றால் விரைவில் மலையின் மீது குடியேறும் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, பனை வாழ்வியல் இயக்கம் நிறுவனர் ஜான் பீட்டர் உட்பட ஏராளமான சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா