கொலை வழக்கில் தொடர்புடைய நபர் நீதிமன்றம் சென்று திரும்பியபோது வெட்டிக்கொலை

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் நீதிமன்றம் சென்று திரும்பியபோது வெட்டிக்கொலை
X

மூன்று பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட மணிகண்டன்.

ஆலங்குளம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபர் நீதிமன்றம் சென்று திரும்பிய நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி என்பவரின் மகன் மணிகண்டன் வயது (23). ஜேசிபி டிரைவர். கடந்த 2020ம் ஆண்டு நாச்சியார்புரம் அருகே காட்டுப்பகுதியில் ஆடு திருடிபோது இருதரப்பினர் இடையே நடந்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மணிகண்டனும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தென்காசி நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

இந்த நிலையில் இன்று கொலை வழக்கு தொடர்பாக தென்காசி நீதிமன்றத்தில் விசாரணைக்காக. வீட்டில் இருந்து மணிகண்டன் தென்காசி நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தது மணிகண்டன் கிடாரகுளம் திரும்பியுள்ளார். அப்போது கிடாரகுளத்தில் பாலத்தின் அருகே அரிவாளுடன் மறைந்து இருந்த ஒரு கும்பல் இரு இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டனை வழிமறித்து சராமரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறிய மணிகண்டன் பைக்கில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். அப்போது அந்த கும்பல் மணிகண்டனை ரோட்டில் துரத்தி சென்று சாலையோரம் உள்ள கடை அருகே அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. ரோட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக உயிரிழந்துள்ளார்

தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஊத்துமலை ஆய்வாளர் சுரேஷகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

கடந்த 2020 ம் ஆண்டில் நாச்சியார்புரம் விலக்கு காட்டுப்பகுதியில் ஆடு திருடிபோது கிடாரகுளம் நெட்டூரை சேர்ந்த இருகும்பலுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நெட்டூரை சேர்ந்த ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்கு பழியாக தற்போது கிடாரகுளத்தை சேர்ந்த மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆலங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளார் மேலும் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!